/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் போதை பொருள் விற்பனை: இருவர் கைது
/
ஊட்டியில் போதை பொருள் விற்பனை: இருவர் கைது
ADDED : டிச 17, 2024 11:25 PM
ஊட்டி; ஊட்டியில் கஞ்சா, மெத்த பெட்டமைன் போதை பொருட்கள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக, ஊட்டி உட்பட பிற இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, ஊட்டி ஜி-1 போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில், எஸ்.ஐ., ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். போலீசாரை பார்த்ததும் இரண்டு பேர் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள், ஊட்டி மேரிஸ்ஹில் பகுதியை சேர்ந்த கவுசிக், 24. ஓல்டு ஊட்டியை சேர்ந்த சதீஷ்பாபு,38, என்பது தெரிய வந்தது. அவர்களிடம், 30 கிராம் கஞ்சா மற்றும் மெத்த பெட்டமைன் ஒன்றரை கிராம் ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடந்து வருகிறது.