/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றில் விழுந்த போதை வாலிபர் மீட்பு
/
ஆற்றில் விழுந்த போதை வாலிபர் மீட்பு
ADDED : டிச 12, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுாரில் மது போதையில் ஆற்றில் தவறி விழுந்த வாலிபரை, குன்னுார் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
குன்னுார் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்று வாலிபரை மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், காந்திபுரம் பகுதி சேர்ந்த ஹரி, 22 என்பதும், மது போதையில் விழுந்ததும் தெரிய வந்தது.

