/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு நீலகிரியில் பணியிடம்
/
டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு நீலகிரியில் பணியிடம்
ADDED : பிப் 28, 2026 06:59 AM

சென்னை: மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்தவர் சுந்தரேசன், 53. இவர், கடந்தாண்டு ஜூலையில், அரசு வழங்கிய வாகனத்தை உயர் அதிகாரிகள் பறித்ததால், குடியிருப்பில் இருந்து அலுவலகத்திற்கு சீருடையில் நடந்து சென்றார்.
இதற்கான காரணம் குறித்து பேட்டியும் அளித்தார். இதனால் சர்ச்சை எழுந்தது. அவர் தங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக, இரண்டு காவலர்கள், சுந்தரேசன் மீது புகாரும் அளித்தனர். இதனால் அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுந்தரேசன் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறவும், மத்திய மண்டலத்தில் பணியிடம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், சில தினங்களுக்கு முன், சுந்தரேசன் மீதான சஸ்பெண்ட் உத்தரவை, உள்துறை செயலர் தீரஜ்குமார் ரத்து செய்தார். நீலகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.,யாக சுந்தரேசன் பணியமர்த்தப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் பிறப்பித்துள்ளார்.

