/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை, நடைபாதை சேதமானதால் பாதிப்பு; சீரமைப்பு பணியை தாமதப்படுத்துவதால் நாள்தோறும் அவதி
/
சாலை, நடைபாதை சேதமானதால் பாதிப்பு; சீரமைப்பு பணியை தாமதப்படுத்துவதால் நாள்தோறும் அவதி
சாலை, நடைபாதை சேதமானதால் பாதிப்பு; சீரமைப்பு பணியை தாமதப்படுத்துவதால் நாள்தோறும் அவதி
சாலை, நடைபாதை சேதமானதால் பாதிப்பு; சீரமைப்பு பணியை தாமதப்படுத்துவதால் நாள்தோறும் அவதி
ADDED : பிப் 19, 2025 09:58 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பொன்னானி பகுதியில், சாலை சீரமைப்பு பணியின் போது, கிராமத்திற்கு செல்லும் சாலை மற்றும் அதனை ஒட்டிய பாதுகாப்பு சுவரை இடித்து பல மாதங்கள் கடந்தும் சீரமைத்து தராததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பந்தலுார் அருகே பொன்னானி -மாங்கம்வயல்- கடலக்கொல்லி இணைப்பு சாலையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், பொன்னானி ஜி.டி.ஆர்., பள்ளி அருகே, கிராமத்திற்கு செல்லும் சிமென்ட் சாலை மற்றும் தனியார் குடியிருப்பின் பாதுகாப்பு சுவரை இடித்து அந்த பகுதியில் சிறு பாலம் கட்டப்பட்டது.
இதனால், கிராமத்திற்கு நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்பிற்கு பாதுகாப்பு வசதி இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சிறு பாலத்தின் ஒரு பகுதியில் செல்லும் கால்வாயில், கழிவுநீர் வடிந்து ஓட இயலாத வகையில் உள்ளதால், கழிவுநீர் தேங்கி நின்று சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற ஒரு நபர், தடுமாறி கழிவுநீரில் விழுந்து காயமடைந்தார்.
இதை தொடர்ந்து, 'அப்பகுதியில் உள்ள சிமென்ட் சாலை மற்றும் சுவர் பகுதியை சீரமைத்து தரவும், கழிவு நீர் வழிந்தோட ஏதுவாக சிறு பாலத்தில் மாற்ற செய்ய வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தினர். எனினும் இதுவரை நடவடிக்கை இல்லை.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரமேஷ்குமார் கூறுகையில், '' அப்பகுதியில் விரைவில் ஆய்வு செய்வதுடன், நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் பூர்த்தி செய்து தரப்படும்,'' என்றார்.

