/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் துரியன் பழ சீசன் துவக்கம்
/
குன்னுாரில் துரியன் பழ சீசன் துவக்கம்
ADDED : ஏப் 16, 2025 09:20 PM

குன்னுார்; குன்னுார் பர்லியாரில், மருத்துவ குணம் கொண்ட துரியன் பழ சீசன் துவங்கிய போதும், தோட்டக்கலை பண்ணையில் மட்டும் தற்போது பூக்கள் பூத்துள்ளதாக தெரிவிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குன்னுார் பர்லியார் பகுதியில் துரியன் பழங்கள் அதிகம் விளைகின்றன. ஆண்டுதோறும் காலநிலைக்கு ஏற்ப மார்ச் முதல் ஆக., மாதம் வரையில், சீசன் காலங்களில் பழங்கள் விளையும்.
இந்நிலையில், நடப்பாண்டு கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு, மழையின் தாக்கம் காரணமாக, இங்குள்ள தனியார் இடங்களில் உள்ள மரங்களில், துரியன் பழங்கள் சீசன் துவங்கியுள்ளது. தற்போது கிலோ, 450 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில், உள்ள மரங்களில், பூக்கள் மட்டுமே பூத்திருப்பதாக தோட்டக்கலை துறையினர் கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,' இங்குள்ள பண்ணையில் தற்போது துரியன் விளைய வாய்ப்புள்ளது. ஆனால், பழம் விளையவில்லை என்று கூறி, சிலர் மறைமுகமாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது,' என்றனர்.