/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தாவரவியல் பூங்கா குளங்களில் துார் வாரும் பணி; தண்ணீைர சேமிக்க நடவடிக்கை

ADDED : நவ 21, 2024 09:02 PM

ஊட்டி ; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள குளங்கள் துார் வாரப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இப்பூங்காவில் இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா ஆகியவை உள்ளன.
இந்த பூங்காக்களில் பெரிய அளவிலான குளங்கள் உள்ளன. அதில், ஜப்பான் பூங்கா மிதக்கும் பூங்காவை போன்று அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவை சுற்றிலும் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, பூங்கா நுழைவு வாயில் பகுதியில் ஒரு பெரிய குளம் உள்ளது. பூங்காவில் தண்ணீருடன் அல்லி செடிகள் காணப்படும். அவ்வப்போது மலர்களும் பூத்து வருகிறது.
இந்த குளங்களில் இருந்து, மலர் செடிகளுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த குளங்கள் கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக துார்வாரப்படாததால் சேறும், சகதி நிறைந்து தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, இந்த குளங்களை துார்வார பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொக்லைன் பயன்படுத்தி, குளங்களில் உள்ள மண் அகற்றப்பட்டு வருகிறது.
துார்வாரும் பணிகள் நிறைவடைந்ததும் குளங்களில் தண்ணீர் தேக்கப்பட உள்ளது. அதன் பின், இப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.
குளத்தில் எடுக்கப்படும் மண், கோடை சீசனுக்கு தயாராகும் பிற பூங்காங்களில் மலர் நாற்றுகளை வளர்க்க பயன்படுத்தப்பட உள்ளது.