/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புன்னம்புழா ஆற்றில் குறைந்து வரும் நீர்வரத்து விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

ADDED : மார் 20, 2024 01:22 AM

கூடலுார்:கூடலுார் முதுமலை பகுதியில், கடந்த ஆண்டு எதிர்பார்த்த பருவமழை பெய்யவில்லை. தொடர்ந்து, பனிப்பொழிவு ஏற்பட்டதுடன், கோடை மழையும் ஏமாற்றி வருகிறது. இதனால், வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் கோடைக்கு முன்பாக அதிகரித்துள்ளது. நீரோடைகள் வறண்ட நிலைக்கு மாறி வருகிறது. முக்கிய ஆறுகளிலும் தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வருகிறது.
கூடலுாரில் உற்பத்தியாகி, கோடையிலும் வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்து வரும், பாண்டியார் -புன்னம்புழா ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதேநிலை தொடர்ந்தால் நீர்வரத்து குறைந்து வனவிலங்குகளுக்கு குடிநீர் அபாயம் ஏற்படும் என்பதால் வனத்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுாரில் உற்பத்தியாகி கேரளா செல்லும், பாண்டியார்- - புன்னம்புழா ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள், கோடையிலும் வனவிலங்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இதனால், கோடை காலத்தில் பல பகுதிகளில் இருந்தும் இப்பகுதிக்கு வனவிலங்குகள் வந்து தங்கி செல்வது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டு நீர்வரத்து குறைந்து வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால், வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது,'என்றனர்.