/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இ.கம்யூ., நுாற்றாண்டு விழா பேரணி
/
ஊட்டியில் இ.கம்யூ., நுாற்றாண்டு விழா பேரணி
ADDED : டிச 27, 2024 10:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டியில் இ.கம்யூ., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரணி மற்றும் கொடியேற்று விழா நடந்தது.
ஊட்டி கேசினோ சந்திப்பு பகுதியில் இருந்து காபிஹவுஸ் வரை பேரணி நடந்தது. பேரணிக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் போஜராஜ் தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகி தாமஸ் பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியில் கம்யூ.,கட்சியின் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
பின் , காபி ஹவுஸ் பகுதியில் கொடியேற்று விழா நடந்தது. மாநில குழு உறுப்பினர் பெள்ளி,ரகுநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

