/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இ--பாஸ் நடைமுறை தொடரும்
/
ஊட்டியில் இ--பாஸ் நடைமுறை தொடரும்
ADDED : அக் 01, 2024 06:22 AM

ஊட்டி : ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் இ--பாஸ் நடைமுறை அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர உள்ளது.
நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல, இ--பாஸ் முறை மே மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. 'இந்த நடைமுறை ஜூன், 30ம் தேதி வரை பின்பற்றப்படும்,' என, உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், செப்.,30 வரை நீட்டிக்கப்பட்டது.
இது, தொடர்பான விசாரணை, நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில், 'நீலகிரிக்கு செல்லும் வாகனங்கள் குறித்து, ஐ.ஐ.டி; -ஐ.ஐ.எம்., மையங்கள் தரப்பில் ஆய்வு செய்வதால், இ--பாஸ் நடைமுறையை நீட்டிக்கலாம்,' என, தெரிவக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த அறிவிப்பு வரும் வரை இ--பாஸ் நடைமுறை தொடர உள்ளது.