/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கருமாரியம்மன் கோவில் யாக பூஜையில் பரவசம்
/
கருமாரியம்மன் கோவில் யாக பூஜையில் பரவசம்
ADDED : ஏப் 06, 2025 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி; கோத்தகிரி டானின்டன் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் நடந்த யாக பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மண்டல பூஜை முடிவற்ற நிலையில், நாள்தோறும் பல்வேறு உபயதாரர்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று புனர்பூஜை, யாக பூஜை மற்றும் அலங்கார பூஜை நடத்தப்பட்டது.
காலை, 6:30 மணி முதல் நடந்த பூஜையில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.