தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாணவர்களுக்கு கல்வி உபகரண தொகுப்பு

மாணவர்களுக்கு கல்வி உபகரண தொகுப்பு

மாணவர்களுக்கு கல்வி உபகரண தொகுப்பு


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலூர்: ரெப்கோ வங்கி பந்தலூர் கிளை, தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில், தாயகம் திரும்பிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உபகரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேலாளர் விஸ்வநாதன் வரவேற்றார். மாணவர்களுக்கு, புத்தகப் பை, நோட்டு புத்தகங்கள், குடை, மழை கோட்டு உள்ளிட்ட உபகரணங்கள், கல்லூரி மாணவர்களுக்கு டேப் ஆகியவற்றை தலைவர் சந்தானம் வழங்கி பேசியதாவது,'' வறுமையை காரணம் காட்டி கல்வியை இடைநிறுத்தக்கூடாது என்பதற்காக, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரண பொருட்களை, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படுகிறது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் முழு செலவையும் வங்கி ஏற்றுக்கொள்ளும் நிலையில், ஒரு பெற்றோர் உள்ள குழந்தைகளுக்கும் கல்வி உதவி முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார். மேலாளர் சுஜாதா, பேரவை பிரதிநிதிகள் கிருஷ்ண பாரதி, ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us