விடுபட்ட வாக்காளர்கள் பதிவு அவசியம்: கலெக்டர் வேண்டுகோள்
விடுபட்ட வாக்காளர்கள் பதிவு அவசியம்: கலெக்டர் வேண்டுகோள்
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:22 PM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம், முதல் முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிக்கை;
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்த நிலையில், தொடர் திருத்த நடைமுறையின் கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம், முதல் முறையாக தகுதி பெரும் வாக்காளர்களை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு தீவிர திருத்த காலகட்டத்தில் மட்டுமே, படிவம்,6 பயன்படுத்தப்படும். சிறப்பு தீவிர திருத்தம் அல்லாத காலகட்டத்தில் வாக்காளர் பதிவு விதிகள், 1960 ன் படி, பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதி வாய்ந்த இளம், முதல் முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு, மூன்று சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாயிலாக, நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதி வாய்ந்த இளம், முதல் முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அந்த செய்தி குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
