தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பாலக்காடு ஐ.ஐ.டி., யில் எலக்ட்ரிக்கல் பயிலரங்கம்

பாலக்காடு ஐ.ஐ.டி., யில் எலக்ட்ரிக்கல் பயிலரங்கம்

பாலக்காடு ஐ.ஐ.டி., யில் எலக்ட்ரிக்கல் பயிலரங்கம்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 05:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: பாலக்காடு ஐ.ஐ.டி.யின் எலக்ட்ரிக்கல் பொறியியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஸ்பார்க் இட்! - ப்ரம் கான்செப்ட்ஸ் டு சர்க்யூட்ஸ் (Spark It! - From Concepts to Circuits) என்ற தலைப்பிலான ஒருநாள் செயல்முறைப்பயிலரங்கம் நடந்தது.

வகுப்பறையில் கற்கும் இயற்பியல் கோட்பாடுகளை, எளிய மின்சுற்றுகள் (Electrical Circuits), செயல்விளக்கங்கள் மற்றும் செய்முறைப்பயிற்சிகள் வழியாக, நடைமுறை அறிவோடு இணைப்பதே இப்பயிலரங்கின் பிரதான நோக்கமாகும்.

சித்தூர் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மருதரோடு அரசு தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளி, மலம்புழா ஆசிரமம் உயர்நிலைப் பள்ளி, கண்ணாடி மேல்நிலைப்பள்ளி,

சித்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகளிலிருந்து 44 மாணவ -மாணவியரும், 9 ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

எலக்ட்ரிக்கல் பொறியியல் துறை ஆராய்ச்சியாளர் ஹரிகிருஷ்ணன் செயல்முறைப் பயிற்சிகளை வழிநடத்தினார். எளிய மின்சுற்றுகளைத் தாங்களே நேரடியாக உருவாக்கிப் புரிந்து கொள்ளும் வகையில், மாணவர்களுக்கு அடிப்படை எலக்ட்ரிக்கல் கருத்துகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு, எலக்ட்ரிக்கல் பொறியியல் துறை இணைப்பேராசிரியர் அருண் ராகுல், தொழில்நுட்பக் கண்காணிப்பாளர் சனில் ஷரபுதீன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிறைவு விழாவில், மாணவர் நலப்பிரிவு டீன் முனைவர் ஸ்வரூப் சாஹூ கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிலரங்கச் சான்றிதழ்களை வழங்கியதுடன், வழிகாட்டிகளாக வந்திருந்த ஆசிரியர்களையும் கவுரவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us