/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'தேர்தல் நோட்டீஸில் அச்சகத்தின் பெயர் இருக்க வேண்டும்'
/
'தேர்தல் நோட்டீஸில் அச்சகத்தின் பெயர் இருக்க வேண்டும்'
'தேர்தல் நோட்டீஸில் அச்சகத்தின் பெயர் இருக்க வேண்டும்'
'தேர்தல் நோட்டீஸில் அச்சகத்தின் பெயர் இருக்க வேண்டும்'
ADDED : மார் 20, 2024 10:24 PM
மேட்டுப்பாளையம் : தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், அரசியல் கட்சியினர் அச்சடிக்கும் அனைத்து நோட்டீஸ்களிலும், அச்சகத்தின் பெயர் கட்டாயம் போட வேண்டும் என, அதிகாரிகள் கூறினர்.
மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், அச்சகம், மண்டபம் நகைக்கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் ஜெயபால் தலைமை வகித்து பேசியதாவது:
தேர்தல் நடத்தை விதிமுறை, தற்போது நடைமுறையில் உள்ளது. அதனால் அரசியல் கட்சியினர், நோட்டீஸ் மற்றும் வால்போஸ்டர் அச்சடித்தால், அதன் எண்ணிக்கையும், அச்சகத்தின் பெயரையும், போன் எண்ணையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். பிரச்னைக்குரிய படங்கள் மற்றும் வாசகம் இருந்தால், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினர், கூட்டம் நடத்துவது குறித்து, முன்கூட்டியே, உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல், தெரிவிக்க வேண்டும். மண்டபங்களில் அரசியல் கட்சியினர் தங்கி இருந்தால், தேர்தல் நடைபெறுவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பாக, அனைவரையும் வெளியேற்ற வேண்டும்.
நகைக்கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு வெள்ளி நகைகளை இலவசமாக கொடுப்பதோ, அடகு வைத்த நகைகளுக்கு அதிகமான பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கொடுப்பதாக தகவல் தெரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அலுவலர் பேசினார். தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் நன்றி கூறினார்.

