/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூரில் மின் மயானம்; பொதுமக்கள் வலியுறுத்தல்
/
மஞ்சூரில் மின் மயானம்; பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 24, 2025 09:33 PM
மஞ்சூர்; மஞ்சூர் பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குந்தா பகுதியில் கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகள் மற்றும் முள்ளிகூர், மேல்குந்தா, பாலகொலா, இத்தலார் ஆகிய ஊராட்சிகள் உள்ளன.
50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குந்தா பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான மயானங்களில் போதிய பராமரிப்பு இல்லை. இதனால், சதுப்பு நிலங்களாக மாறி புதர் சூழ்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய போதுமான இடம் இல்லாமல் அவதி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
குந்தா தாலுகாவில் உள்ள அனைத்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளை ஒருங்கிணைத்து மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.