/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனுமதி இன்றி மின்வேலி; வன ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
/
அனுமதி இன்றி மின்வேலி; வன ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
அனுமதி இன்றி மின்வேலி; வன ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
அனுமதி இன்றி மின்வேலி; வன ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
ADDED : ஆக 26, 2025 09:37 PM
கூடலுார்; கூடலூர், ஸ்ரீமதுரை அருகே உள்ள, வடவயல் பகுதியில் உள்ள நிலத்தில், இரு நாட்களுக்கு முன், சிலர் சோலார் மின்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில், வனக்காப்பாளர் அதிஷன் மற்றும் வன ஊழியர்கள், ஆய்வு செய்த போது அனுமதி இன்றி மின்வேலி அமைப்பது தெரியவந்தது.'அப்பகுதியில் மின்வேலி அமைக்க கூடாது' என, வன ஊழியர்கள் தடுத்தனர்.
இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சிலர், வனக்காப்பாளர் அதிஷனை தாக்கியுள்ளனர். அவர் சிகிச்சிக்காக கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கூடலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டு, வர்கிஸ்,50, மாணிக்கன், 65, ஆகியோரை நேற்று கைது செய்தனர். சிலரை தேடி வருகின்றனர்.