/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உயர் மின்னழுத்த கம்பியில் சாய்ந்த மரத்தால் மின்தடை
/
உயர் மின்னழுத்த கம்பியில் சாய்ந்த மரத்தால் மின்தடை
உயர் மின்னழுத்த கம்பியில் சாய்ந்த மரத்தால் மின்தடை
உயர் மின்னழுத்த கம்பியில் சாய்ந்த மரத்தால் மின்தடை
ADDED : அக் 15, 2025 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் பகுதியில் பெய்த மழையால், நேற்று முன்தினம் ஜெகதளா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மின்தடை அதிகாலை, 3:00 மணிக்கு சீரானது. சில பகுதிகளில், 6:00 மணிக்கு மின் வினியோகம் சீரானது.
இந்நிலையில், 'ஆப்பிள்-பி' பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் மீது மரம் சாய்ந்ததால், ஆப்பிள் பி, காலேஜ் ரோடு உட்பட சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றினர். மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு. காலை 8:15 மணிக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது.