/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரதமரின் சூரிய சக்தி மின் திட்ட பணிகள் பயன் பெற மின்வாரியம் அழைப்பு
/
பிரதமரின் சூரிய சக்தி மின் திட்ட பணிகள் பயன் பெற மின்வாரியம் அழைப்பு
பிரதமரின் சூரிய சக்தி மின் திட்ட பணிகள் பயன் பெற மின்வாரியம் அழைப்பு
பிரதமரின் சூரிய சக்தி மின் திட்ட பணிகள் பயன் பெற மின்வாரியம் அழைப்பு
ADDED : அக் 27, 2025 10:53 PM

ஊட்டி: பிரதமரின் சூரிய சக்தி மின் திட்டம் குறித்து மின்வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி, 2024, பிப்., 13ல் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, ஒரு கிலோ வாட், 30 ஆயிரம், இரண்டு கிலோவாட், 60 ஆயிரம், மூன்று கிலோ வாட்டுக்கு, 78 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு, வங்கிகள் வாயிலாக உடனடியாக கடன் வழங்கப்படும். இதற்கான மானியம், நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக, சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற, ஏழு நாட்களில் இருந்து, 30 நாட்களுக்குள் செலுத்தப்படும்.
இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக ஊட்டி மின் வாரிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில் மின்வாரிய அதிகாரிகள் சாந்தநாயகி, சிவக்குமார் ஆகியோர், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்திய அமைச்சகத்தின், வீடுகளுக்கான பிரதமரின் சூரிய சக்தி மின் திட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேற்பார்வை செயற்பொறியாளர் சாந்தநாயகி கூறுகையில், '' வீடுகளுக்கான பிரதமரின் சூரிய சக்தி மின் திட்டம் குறித்து மின் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ வாட் சூரிய தகடு, ஒரு நாளில், 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பங்கள், registration.pmsuryag har.gov.in என்ற இணையதளம், '' PM - suryaghar ஆப் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.'' என்றார்.

