/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 4 கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வந்தாச்சு
/
நீலகிரியில் 4 கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வந்தாச்சு
நீலகிரியில் 4 கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வந்தாச்சு
நீலகிரியில் 4 கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வந்தாச்சு
ADDED : ஏப் 24, 2025 10:52 PM

ஊட்டி, ; நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள நான்கு உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் மே மாதம் நடத்தப்படுவதை முன்னிட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஊட்டிக்கு வந்தன.
மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதில், நீலகிரியில் உள்ள ஊரக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள நான்கு பதவிகளுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, இடைத்தேர்தல் நடைபெறும் ஓட்டு சாவடி பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. தேர்தல் நடைபெறும் பூத் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு மேற்கொள்வதற்காக கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மின்னணு ஓட்டுப் பெட்டிகள் நீலகிரிக்கு வந்தன.
நான்கு பதவிக்கு போட்டி
மின்னணு ஓட்டு இயந்திரங்களில் கன்ட்ரோல் யூனிட்டுகள், பேலட் யூனிட்டுகள் வந்துள்ளன. இது  2011 மற்றும் 2012 மாடல்களாகும்.
இதை கலெக்டர் லட்சுமி பவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆய்வு செய்து,கேரளா கிளப் கட்டடத்தில் அமைக்கப்பட்ட 'ஸ்ட்ராங் ரூமில்' பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் நகராட்சி, 6 வது வார்டு கவுன்சிலர், நெல்லியாளம் நகராட்சி, 10வது வார்டு கவுன்சிலர், உலிக்கல் பேரூராட்சி, 18 வது வார்டு கவுன்சிலர், கீழ்குந்தா பேரூராட்சி, 6 வார்டு கவுன்சிலர் ஆகிய நான்கு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

