/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படைச்சேரி பகுதியில் யானைகள் முகாம்
/
படைச்சேரி பகுதியில் யானைகள் முகாம்
ADDED : செப் 24, 2024 11:31 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே படைச்சேரி பகுதியில் இரு யானைகள் இரவில் முகாமிட்டு அச்சுறுத்தி வருகின்றன.
இரு யானைகள் சரோஜினி என்பவரது வீட்டு கதவை உடைத்ததுடன், வீட்டு சுவரை சேதப்படுத்தி உள்ளே செல்ல முற்பட்டுள்ளன. அதில், வீட்டு சுவர் மற்றும் கூரை முழுமையாக பாதிக்கப்பட்டது.
அதே பகுதியை சேர்ந்த தங்கம்மா என்பவர் வீட்டு கதவை ஒரு யானை தட்டி உள்ளது. அவர் திறந்த போது, எதிரே யானை நிற்பதை பார்த்து மிரண்டு, ஓடி உயிர் தப்பி உள்ளார்.
தகவல் அறிந்த, எம்.எல்.ஏ., ஜெயசீலன், சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி, துணை தலைவர் சந்திரபோஸ், மக்கள் வாழ்வாதார இயக்க நிர்வாகி சிபி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள்,நேற்று வனச்சரகர் அய்யனாரை சந்தித்து, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வலியுறுத்தி, மனு அளித்தனர். தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.