/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்; மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
/
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்; மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்; மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்; மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
ADDED : அக் 10, 2025 10:05 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே கருத்தாடு, மாங்காமூலா சுற்று வட்டார பகுதிகளில், குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாமிட்டு இருப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
பந்தலுார் அருகே கருத்தாடு, மாங்காமூலா சுற்று வட்டார பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. குடியிருப்புகளுக்கு மத்தியில் விவசாய தோட்டங்களும் உள்ளதுடன், அதனை ஒட்டி வனப்பகுதியும் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில், யானைகள் முகாமிடுவதால் இரவு, 7:00 மணிக்கு மேல் இப்பகுதி மக்கள், வெளியே வர முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதியில், யானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளததால், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு காலை நேரத்தில் செல்வது மற்றும் மாலை நேரங்களில் வீடுகளுக்கு திரும்புவதற்குள் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் கூடுதலான வன பணியாளர்களை நியமித்து, குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை அடர் வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என்றனர். வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில் குடியிருப்பை ஒட்டி யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்,' என்றனர்.