ADDED : ஜூலை 25, 2026 03:35 AM
குன்னுார்: குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வந்த ஒற்றை யானை சாலையில் உலா வந்த வாகனங்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல இடங்களிலும் காட்டு யானைகள் உலா வருகின்றன. அதில், குரும்பாடி அருகே உலா வந்த ஒற்றை காட்டு யானை, சாலையின் குறுக்கே நடந்து சென்றது. இருசக்கர வாகன ஓட்டிகளும், இதர வாகன ஓட்டிகளும் பாதுகாப்பான இடைவெளியில் வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர். எனினும், வாகனங்களை விரட்டியது. பின்பு, வனப்பகுதிக்குள் சென்றது.
வனத்துறையினர் கூறுகையில்,' மலை பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதை தவிர்ப்பது; வன விலங்குகளை கண்டால் வாகனங்களை பாதுகாப்பான இடைவெளியில் நிறுத்துவது; ஹார்ன் ஒலி எழுப்புவதையும், புகைப்படம் வீடியோ எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.
