/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த காரை சேதப்படுத்திய யானை
/
வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த காரை சேதப்படுத்திய யானை
வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த காரை சேதப்படுத்திய யானை
வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த காரை சேதப்படுத்திய யானை
ADDED : ஆக 18, 2025 08:36 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே கூவமூலா குடியிருப்பு பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு, ஒற்றை யானை வந்துள்ளது.
குடியிருப்பு வளாகங்களில் இருந்த தோட்டங்களில் புகுந்த யானை, வீட்டு தோட்டங்களில் இருந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து, வீட்டு வாசல்களில் உலா வந்த யானை விஸ்வநாதன் என்பவரின் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் பக்கவாட்டு கதவுகளை தாக்கி சேதப்படுத்தியது. தொடர்ந்து, கிராம மக்கள் இணைந்து சப்தம் எழுப்பி யானையை அங்கிருந்து துரத்தினர். தேவாலா வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதுடன், 'பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்,' என, தெரிவித்தனர்.