/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தெப்பக்காடு முகாமில் யானைப்பொங்கல்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
/
தெப்பக்காடு முகாமில் யானைப்பொங்கல்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
தெப்பக்காடு முகாமில் யானைப்பொங்கல்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
தெப்பக்காடு முகாமில் யானைப்பொங்கல்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
UPDATED : ஜன 15, 2025 07:24 PM
ADDED : ஜன 15, 2025 07:21 PM

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த யானைப்பொங்கல் விழாவில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இங்கு ஆண்டு தோறும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இன்று வனத்துறை சார்பில் மண் பானைகளில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர்.
விழாவில் பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் நடனம் ஆடினர். திரளாக சுற்றுலா பயணிகள் விழாவில் கலந்து கொண்டு யானைப்பொங்கலை ரசித்தனர்.