தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குட்டியுடன் உலா வரும் யானை: தொழிலாளர்கள் அச்சம்

குட்டியுடன் உலா வரும் யானை: தொழிலாளர்கள் அச்சம்

குட்டியுடன் உலா வரும் யானை: தொழிலாளர்கள் அச்சம்


UPDATED : அக் 30, 2026 03:41 PM

ADDED : அக் 30, 2026 03:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 03:41 PM ADDED : அக் 30, 2026 03:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் கோழிக்கோடு சாலை மரப்பாலம் அரசு, தனியார் தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் பாண்டியார் -புன்னம்புழா ஆற்றை ஒட்டிய ஓவேலி, குண்டம்புழா வனப்பகுதியில் தனியாக உலா வந்த பெண் யானை கடந்த, 2022 ஜூலை 9ம் தேதி பால்மேடு பாண்டியார் டான்டீ பகுதியில் ஆண் குட்டியை ஈன்றது.

தொடர்ந்து, அதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இரவில் குடியிருப்புக்குள் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுருத்தி வருகிறது. சமீபகாலமாக பகல் நேரங்களிலும் அரசு, தனியார் தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது. வன ஊழியர்கள் இதனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த வாரம், நாடுகாணி அருகே, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வாகனத்தை தாக்கியது.

இந்நிலையில், மாலை மரப்பாலம் அருகே, கோழிக்கோடு சாலையை ஒட்டிய தனியார் தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் முகமிட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இரவு, 8:00 மணிக்கு கோழிக்கோடு சாலையை கடந்து சீனகொல்லி குடியிருப்பு பகுதியில் முகாமிட்டது. வன ஊழியர்கள் விடிய, விடிய கண் விழித்து விரட்டினர். அதிகாலை அங்கிருந்து சென்று பால்மேடு அருகே, வனப்பகுதியில் சென்று முகாமிட்டது.

சமூக ஆர்வலர் சுரேஷ் கூறுகையில், ‘‘குட்டியுடன் உலா வரும் யானை, குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. சமீபத்தில், வன ஊழியர்கள் சென்ற வாகனத்தை தாக்கியது. இவை, வீடுகளையும், மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளதால், இவை குடியிருப்புக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us