/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைக்கில் சென்றவர்களை தாக்க முயன்ற யானை
/
பைக்கில் சென்றவர்களை தாக்க முயன்ற யானை
ADDED : டிச 17, 2024 09:40 PM

பந்தலுார்; வயநாடு மாவட்ட புல்பள்ளி பகுதியை சேர்ந்த இளைஞர்களை காட்டு யானை தாக்க வந்த சம்பவம் குறித்த 'வீடியோ' வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளி பகுதியை சேர்ந்த டெல்பின், கிறிஸ்டோபர் ஆகிய இருவரும் வயநாடு மானந்தவாடியிலிருந்து பாவலி சாலையில் மைசூருக்கு சென்றுள்ளனர்.
நாகர்ஹோலா வனப்பகுதியில் சென்றபோது, சாலையில் நடந்து வந்த ஆண் யானை ஒன்று அவர்களை தாக்க முயன்றது. அப்போது எதிரே வந்த லாரி ஓட்டுனர் ஹாரன் அடித்து யானையிடமிருந்து அவர்களை காப்பாற்றினார். பைக்கை சாலையில் விட்டு, லாரியில் ஏறி இருவரும் உயிர் தப்பிய நிலையில், டெல்பின் என்பவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இந்த 'வீடியோ' வைரலாகி வருகிறது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.