'சாயில் நெய்லிங்' திட்ட தடுப்பு: ஆபத்தான சரிவில் நடந்த யானை
'சாயில் நெய்லிங்' திட்ட தடுப்பு: ஆபத்தான சரிவில் நடந்த யானை
UPDATED : ஜூன் 30, 2026 08:58 PM
ADDED : ஜூன் 30, 2026 08:31 PM

குன்னுார்: குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், மழையால் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்க பசுமை வலைகள் மற்றும் மண்; ஆணி (சாயில் நெய்லிங்) தொழில்நுட்பத்தில் தடுப்பு ஏற்படுத்தி பலப்படுத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த ஆபத்தான செங்குத்து சரிவில் யானைகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் அங்கு ஒரு யானை நடந்து சென்றதை கண்ட சிலர் அதனை, 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தது வைரலாகி வருகிறது.
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் யானைகளுடன் குட்டிகள் வரும் போது விழும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் உடனடியாக இந்த பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டு, யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகயைில்,'குறிப்பிட்ட பகுதியில் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, யானைகள் செங்குத்தான சரிவுகளில் செல்லாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
