/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குட்டிக்கு சேற்று குளியல் பயிற்சி அளித்த யானைகள் வியப்படைந்த பார்வையாளர்கள்

ADDED : டிச 31, 2025 07:57 AM

பந்தலுார்: பந்தலுார் சேரங்கோடு பகுதியில், குட்டியானைக்கு சேற்று குளியல் குறித்து யானை கூட்டம் பயிற்சி அளித்ததை கண்ட பலரும் வியப்படைந்தனர்.
பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, சேரங்கோடு தேயிலை தோட்டத்தை ஒட்டிய, புதரில், 15 க்கும் மேற்பட்ட யானை கூட்டம் முகாமிட்டு உள்ளது. அதில், மூன்று யானைகள், அதனுடன் இருந்த குட்டி யானைக்கு, சேற்று குளியல் குறித்து பயிற்சியளித்தன.
யானைகளின் கால்களுக்கு இடையில் நின்று பயிற்சி பெற்ற குட்டியானை, சேற்றில் புரண்டு தான் பெற்ற பயிற்சியை செய்து காட்டியது. அதனை பார்த்த தாய் யானை குட்டியை பாசத்துடன், ஆரத்தழுவி வனப்பகுதிக்குள் அழைத்து சென்றது. இதனை நீண்ட நேரம் கண்ட மக்கள் வியப்படைந்தனர். கால்நடை டாக்டர் பாலாஜி கூறுகையில், ''யானைகள் பொதுவாகவே அறிவு கூர்மை உள்ள விலங்கு. குட்டியானைகள், உணவு உட்கொள்வது, குளியல் முறைகள், வழித்தடங்கள் குறித்து அத்தை முறை யானை கற்று கொடுக்கும். பொதுவாக யானைகள் வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ளவும், குளிரில் இருந்தும், கொசுக்கடியில் இருந்து தப்பிக்கவும் சேற்று குளியல் போட்டு உடலில் சேற்றை பூசிக் கொள்ளும். இதுபோன்ற பயிற்சியை கண்டது, மகிழ்ச்சியான தருணமாக உள்ளது,''என்றார்.