/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு கோழிகளை வேட்டையாட சுருக்கு இருவருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்
/
காட்டு கோழிகளை வேட்டையாட சுருக்கு இருவருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்
காட்டு கோழிகளை வேட்டையாட சுருக்கு இருவருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்
காட்டு கோழிகளை வேட்டையாட சுருக்கு இருவருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்
ADDED : டிச 31, 2025 07:57 AM
ஊட்டி: நீலகிரி வன கோட்டம், குந்தா வனச்சரகம், கெத்தை வனப்பகுதி அருகே கோட்டத்தில் காட்டு கோழிகளை வேட்டையாடுவதற்காக, நைலான் சுருக்கு வைக்கப்பட்டுள்ளதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
வனச்சரகர் செல்வகுமார் தலைமையில், வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது, சுருக்கு வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில்,'தோட்டத்தில் கூலி வேலை செய்து வரும் தனியகண்டி பகுதியை சேர்ந்த அர்ஜூணன் மற்றும் பெள்ளத்திக்கொம்பை பகுதியைச் சேர்ந்த, பாபு ஆகியோர், சுருக்கு வைத்தனர்,' என்பது உறுதி செய்யப்பட்டது.
வனத்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தல் படி, காட்டுக்கோழிகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் வீதம், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.