/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின கிராமங்களில் அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்
/
பழங்குடியின கிராமங்களில் அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்
பழங்குடியின கிராமங்களில் அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்
பழங்குடியின கிராமங்களில் அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்
ADDED : ஜன 10, 2026 06:56 AM
குன்னுார்: பழங்குடியின கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
குன்னுார் மேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட மூப்பர்காடு, ஊஞ்சலாடு கோம்பை, பால்மரா லீஸ் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சாலை, நடைபாதை, தடுப்பு சுவர் உட்பட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில், இப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் குன்னுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கூடுதல் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத், மாவட்ட குழு உறுப்பினர்கள் இளங்கோவன், மனோஜ், ருக்மணி, ஜீவா, சுப்ரமணி, உட்பட பழங்குடியின மக்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூடுதல் கலெக்டர் உறுதி அளித்தார்.