/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யணும்' : கனரக வாகன ஓட்டுனர் நல சங்கம் மனு
/
'ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யணும்' : கனரக வாகன ஓட்டுனர் நல சங்கம் மனு
'ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யணும்' : கனரக வாகன ஓட்டுனர் நல சங்கம் மனு
'ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யணும்' : கனரக வாகன ஓட்டுனர் நல சங்கம் மனு
ADDED : ஜன 03, 2024 11:43 PM
ஊட்டி, : 'தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நல சங்க, நீலகிரி மாவட்ட தலைவர் மது சூதனன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு:
தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நல சங்கத்தை, தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் ஒற்றுமையாக நடத்தி வருகிறோம். வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம். எங்களது சங்கத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்களை தொடர்ந்து இயக்கி வருகின்றனர்.
போதிய கல்வி அறிவு இல்லாத நிலையில், பல மாநிலங்களில் மொழிகள் தெரியாமல், அனுபவத்தின் அடிப்படையில் அரசின் மேல் உள்ள நம்பிக்கையில், ஓட்டுனர் தொழிலை சேவையாக செய்து வருகிறோம். பல நேரங்களில், வெளிமாநிலங்களில் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய சில அரசு அதிகாரிகள் தகாத வார்த்தையில் திட்டுவதால், மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், எதிர்பாராமல் விபத்து நடக்கும் பட்சத்தில், விபத்து நடந்த இடத்தில் வாகனத்தை சேதப்படுத்தி ஓட்டுனர்களை கொடூரமாக தாக்குவதுடன், வாகனத்தில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்கும் செயல்கள் நடக்கின்றன.
இந்நிலையில், 'விபத்து நடந்த இடத்தில் ஓட்டுனர் இல்லாமல் தலைமறைவாகும் பட்சத்தில், ஓட்டுனருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஏழு லட்சம் ரூபாய் அபராதம்,' என்ற சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும். ஓட்டுனர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.