/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுச்சூழல் பாதிப்பால் அழியும் 'தவிட்டு பழம்' :இயற்கை ஆர்வலர்கள் வேதனை
/
சுற்றுச்சூழல் பாதிப்பால் அழியும் 'தவிட்டு பழம்' :இயற்கை ஆர்வலர்கள் வேதனை
சுற்றுச்சூழல் பாதிப்பால் அழியும் 'தவிட்டு பழம்' :இயற்கை ஆர்வலர்கள் வேதனை
சுற்றுச்சூழல் பாதிப்பால் அழியும் 'தவிட்டு பழம்' :இயற்கை ஆர்வலர்கள் வேதனை
ADDED : ஜன 21, 2024 10:41 PM

குன்னுார்:நீலகிரியில் இயற்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளால், அழிவின் பிடியில் உள்ள தவிட்டு பழ செடிகளை பாதுகாக்க வேண்டும்.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை, பழவகை மரங்கள் செடிகள் உட்பட அரிய வகை தாவர இனங்கள் உள்ளன.
கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் இருந்த 'ரோடோமிர்டஸ்' என்ற தவிட்டு பழம் தற்போது அழிந்து வருகிறது. கடந்த காலங்களில் பழங்குடியினர் மட்டுமின்றி நீலகிரி வாழ் மக்கள் தவிட்டு பழங்களை சாதாரண பழங்களாக உட்கொள்வது மட்டுமின்றி மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தி வந்தனர். சுற்றுச்சூழல் பாதிப்புகளால் தவிட்டு பழம் அழிந்து வருகிறது.
இது தொடர்பாக, 'நெஸ்ட்' சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவன தலைவர் சிவதாஸ் கூறியதாவது:
ஆண்டு தோறும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நீலகிரிக்கே உரிய தாவரங்கள் வளரும் பருவமும் மாறி வருகிறது.
குறிப்பாக, பனி பொழியும் காலத்தில் மழையின் தாக்கம் அதிகரித்ததால், ஏப்., மே, ஜூன் மாதங்களில் சீசனான தவிட்டு பழங்களின் மலர்கள் தற்போதே பூத்து, காய்க்க துவங்கியுள்ளது. கிளன்மார்கன், பார்சன்ஸ் வேலி, உள்ளிட்ட இடங்களில் மின் பணிகளால் ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டன. தொட்டபெட்டாவிலும் அழிந்து வருகிறது.
தற்போது மசினகுடி, குன்னுார் பந்துமி, ட்ரூக் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே இவை உள்ளன. எனவே, இதனை பாதுகாக்கவும், அதிக அளவில் வளர்க்கவும் தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.