/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : பிப் 29, 2024 11:59 PM

ஊட்டி;ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், திருப்பூர் மாவட்ட 'சக் ஷம்' அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளர்களுக்கு செயற்கை கை மற்றும் கால்கள், உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை வகித்தார்.
சக் ஷம் அமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, முன்னிலையில், திருப்பூர் தொழில் அதிபர் பிரேம் பிரகாஷ் சத்தா பயனாளர்களுக்கு, 1.13 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார்.
தொடர்ந்து, கோத்தகிரி அரசு நடுநலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 5 பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அமைப்பின் செயலாளர் தமிழ் செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.