/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'இயற்கையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம்'
/
'இயற்கையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம்'
ADDED : பிப் 17, 2025 10:29 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே அம்பலவயல், அரசு உயர்நிலைப் பள்ளியில் 'மிஷன் இயற்கை' அமைப்பின் துவக்க விழா நடந்தது.
பொறுப்பாசிரியர் பத்மப்பிரியா வரவேற்றார். தலைமை ஆசிரியர் கமலாம்பிகை நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''மாறிவரும் கலாசாரம் மற்றும் கட்டுமானங்கள் அதிகரிப்பால், இயற்கை படிப்படியாக அழிந்து, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க பசுமை திறனை அதிகரிக்க வேண்டியது அவசியம் ஆகும். பூமியை அனைத்து உயிரினங்களும் வாழும் சிறந்த இடமாக மாற்றுவதற்கு, அனைவரின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதில், 'மிஷன் இயற்கை' திட்டத்தின் கீழ், அனைவரின் பங்களிப்புடன் இயற்கையை பாதுகாத்திடவும், சுற்றுச்சூழலை பாதுகாத்து, வன வளத்தை அதிகரிக்கவும் கூட்டு நடவடிக்கை மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும்,'' என்றார். தொடர்ந்து, ஆசிரியர் ஜெயா இதன் பணிகள் குறித்து விளக்கமளித்தார். பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்று நடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணன் நன்றி கூறினார்.