/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெடிபொருள் பறிமுதல்: பாலக்காட்டில் இருவர் கைது
/
வெடிபொருள் பறிமுதல்: பாலக்காட்டில் இருவர் கைது
ADDED : நவ 18, 2025 02:41 AM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ராஜிவ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு புலாம்பாறை என்ற பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு அனுமதியின்றி கடந்த பத்து நாட்களாக குவாரி செயல்பட்டு வருவது தெரிந்தது. குவாரியில் நடத்திய சோதனையில், 18 பெட்டிகளில் 3,503 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 1,265 டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, குவாரி நடத்துபவர்களில் ஒருவரான திருச்சூர் மாவட்டம், சாலக்குடி மேலூர் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ், 44, சூப்பர்வைசர் சாலக்குடி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன், 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

