/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலைக்கு உரிய விலை; விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
/
பசுந்தேயிலைக்கு உரிய விலை; விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
பசுந்தேயிலைக்கு உரிய விலை; விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
பசுந்தேயிலைக்கு உரிய விலை; விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : செப் 18, 2024 08:51 PM

குன்னுார் : 'பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்,' என, விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குன்னூர் கேத்தொரை கிராமத்தில் தேயிலை விவசாயிகள் ஒருங்கிணைப்பு, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நெலிகோலு அறக்கட்டளை தலைவர் தருமன் தலைமை வகித்தார்.
அதில், சோகத்தொரை, சக்கலட்டி, கேத்தொரை, தேனிலை, கொதங்கட்டி, ஒடயரட்டி, பொரோரே, தொட்டண்ணி ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
அதில், 'பசுந்தேயிலைக்கான மாதாந்திர விலை அறிவிப்புகள், உற்பத்தி செலவு உள்ளடக்கிய விலையாகஇருக்க வேண்டும்,' என்ற ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்தாத நிலை உள்ளது.
இதற்கு தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்,' என, வலியுறுத்தப்பட்டது.
இதற்காக நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.