/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் சாய்ந்த மரம் மலைபாதையில் விபத்து அபாயம்
/
சாலையோரம் சாய்ந்த மரம் மலைபாதையில் விபத்து அபாயம்
ADDED : ஜன 22, 2025 11:06 PM

குன்னுார்; 'குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், விழுந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் -- மேட்டுப்பாளையம் சாலை, தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.சாலையோரத்தில் மண் தோண்டப்பட்டு, தடுப்பு சுவர் கட்டப்படாமல் உள்ளது. அதில், மரங்கள் பல சாய்ந்த நிலையில் உள்ளது. அவ்வப்போது சில மரங்கள் சாலையில் விழுந்து விடுகிறது.
மரப்பாலம் அருகே விழுந்த மரத்தை தேசிய நெடுஞ்சாலை துறையினர் அகற்றாமல் விட்டு விட்டனர். வளைவான இந்த பகுதியில் இரு கனரக வாகனங்கள் வரும் போது, வழி விடுவதில் இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து சாய்ந்த மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

