/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
குன்னுாரில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னுாரில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னுாரில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 04, 2024 09:52 PM

குன்னுார்; குன்னுாரில் இரவில் பெய்த கன மழையால், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது.
குன்னுார் பகுதிகளில் கடந்த, 3 நாட்களாக இரவில் கனமழை பெய்தது. இதனால், நேற்று காலை குரும்பாடி அருகே புதர்களுடன் மரம் விழுந்தது. தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி நெடுஞ்சாலை துறையின் பொக்லைன் உதவியுடன் அகற்றினர்.
இதனால் காலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் வாகன போக்குவரத்தை சீர்செய்தனர். இதனால் ஊட்டியில் இருந்து புறப்பட்ட அரசு பஸ்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.
இதேபோல, ஆப்பிள் பீ, சப்ளை டிப்போ பகுதியில் மரங்கள் விழுந்ததில், மின் கம்பி அறுந்து விழுந்து, மின்கம்பமும் சேதமானது. தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை மாற்றி சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். இதனால், அப்பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.