/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்: உரிய இழப்பீடு கேட்கும் விவசாயிகள்

ADDED : அக் 21, 2025 07:57 PM
கூடலூர்: கூடலூர், பாடந்துறை, தேன்வயல் பகுதிகளில் நுழைந்த காட்டு யானைகள் வாழை, பாக்கு மரங்களை சேதப்படுத்தியது.
கூடலூரை ஒட்டிய வனப் பகுதிகளில் முகாமிடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க, வனத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், யானைகள் ஊருக்குள் நுழைவதை, நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு பாடந்துறை மற்றும் புத்துவயல் அருகேயுள்ள தேன்வயல் பகுதிகளில் விவசாய தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு நேந்திரன் வாழை, பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வன ஊழியர்கள் யானைகளை விரட்டினர். தொடரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'யானைகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் அச்சமின்றி இருக்க, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.