/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைப்பாதையில் விழுந்த பாறை அகற்றம்
/
மலைப்பாதையில் விழுந்த பாறை அகற்றம்
ADDED : அக் 21, 2025 07:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நந்தகோபால் பாலம் அருகே நேற்று முன்தினம் விழுந்த பாறை நேற்று அகற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை நந்தகோபால் பாலம் அருகே நேற்று முன்தினம் பெரிய பாறை விழுந்தது. சாலையோரத்தில் இருந்ததால் வாகனங்கள் செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை.
நேற்று இரு பொக்லின்கள் வரவழைத்து, பாறைகள் அகற்றப்பட்டன. இதனால், நேற்று மதியம் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.