ADDED : செப் 24, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி நகரப்பகுதியில் மழை பெய்தாலும், கிராமப்புறங்களில் பொய்த்து வருவதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஊட்டி, கோத்தகிரி நகரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால், கிராமப்புறங்களில் சாரல் மழையோடு நின்றுவிடுகிறது. கிராமப்புறங்களில், தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி விவசாயம் மேற்கொள்ளும் விளை நிலங்கள், போதிய ஈரம் காணும் அளவுக்கு மழை பெய்யவில்லை.
இதனால், தேயிலை தோட்டங்களுக்கு உரம்மிட்டு, பராமரித்து வந்த விவசாயிகள், பசுந்தேயிலை மகசூல் வெகுவாக குறைந்துள்ளதால், ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது. தொழிலாளர்களுக்கும் சரிவர வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.