/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி உருளை, பூண்டு புவிசார் குறியீடுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
ஊட்டி உருளை, பூண்டு புவிசார் குறியீடுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஊட்டி உருளை, பூண்டு புவிசார் குறியீடுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஊட்டி உருளை, பூண்டு புவிசார் குறியீடுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 07, 2025 08:41 PM

குன்னூர்: -நீலகிரியில் மலை காய்கறிகளில், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதே சமயம், ஊட்டி பூண்டு என்றாலே அனைத்து இடங்களிலும் சிறப்பு பெற்ற நிலையில், புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுத்தால் சர்வதேச அளவில் சிறப்பு பெற வாய்ப்பாக அமையும்.
நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவதாஸ் கூறுகையில், நீலகிரியில் விளையும் பூண்டு காரம், மனம், தரம் என நிறைந்துள்ளது. இதன் வாசனை, கார தன்மை வைத்து ஊட்டி பூண்டுக்கு தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் மவுசு அதிகம். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூண்டு வாங்கி செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். பிரியாணி, ப்ரைட் ரைஸ் போன்றவற்றின் சுவைக்கு ஊட்டி பூண்டு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரிப்புகள் 6 மாதம் வரை கெடாமல் இருக்கும். இங்கு நிலவும் குளிர் காற்று, பனி, மழை, வெயில் ஆகியவற்றின் சமன்பாடு விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஏற்றதாக உள்ளது, கொடைக்கானலில் விளையும் பூண்டுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், காரம், வாசனை, தரம் ஆகியவற்றை வைத்து, ஊட்டி பூண்டுக்கும் புவிசார் குறியீடு பெற்றால் சர்வதேச அளவில் சிறப்பு பெறும், என்றார்.
நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்க துணை தலைவர் பொருளாளர் சுரேந்திரன் கூறுகையில், உருளைகிழங்கு, கேரட் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும், என்றார்.

