/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அழுகல் நோய் தாக்கியதில் பல ஏக்கர் பாதிப்பு: இஞ்சி பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்
/
அழுகல் நோய் தாக்கியதில் பல ஏக்கர் பாதிப்பு: இஞ்சி பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்
அழுகல் நோய் தாக்கியதில் பல ஏக்கர் பாதிப்பு: இஞ்சி பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்
அழுகல் நோய் தாக்கியதில் பல ஏக்கர் பாதிப்பு: இஞ்சி பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்
ADDED : நவ 07, 2025 08:41 PM

கூடலூர்: -அறுவடைக்கு தயாராகும் இஞ்சி சாகுபடியை அழுகல் நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிக அளவில் இஞ்சி சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு, வயல் நிலங்களில் ஏப்., மாதத்திலும், கரைப்பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில், இஞ்சி பயிரிட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,60 கிலோ கொண்ட மூட்டைக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு வரை விலை கிடைத்தது.
இதனால், விவசாயிகள் அதிக வருவாய் கிடைத்தது. விலை உயர்வு தொடரும் என, எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டு, திடீரென விலை வீழ்ச்சி ஏற்பட்டது. நடப்பாண்டும் அதிக விலையை எதிர்பார்த்து இஞ்சி சாகுபடி செய்துள்ளனர். நடைபாண்டு, மேலும் விலை குறைந்து, 60 கிலோ மூட்டை 1500 முதல் 2000 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் அழுகல் நோய் ஏற்பட்டு இஞ்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்ச ரூபாய் முதலீடு செய்து, இஞ்சி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும். என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டு அதிக அளவில் மழை பெய்துள்ளது. இஞ்சி தோட்டங்களில் சரியான வகையில் வடிக்கால் அமைக்காததால் தண்ணீர் தேங்கி, அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கிய பகுதிகளில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்.' என்றனர்.

