/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'இன்கோ' நிலுவை தொகை தீர்வுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
'இன்கோ' நிலுவை தொகை தீர்வுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
'இன்கோ' நிலுவை தொகை தீர்வுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
'இன்கோ' நிலுவை தொகை தீர்வுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 12, 2025 08:58 PM
குன்னுார்: குன்னுார் 'இன்கோசர்வ்' அலுவலகத்தில், ஆரி கவுடர் விவசாயிகள் நல சங்கம் சார்பில், நிலுவை தொகை வழங்குவது தொடர்பான அதிகாரிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இன்கோசர்வ் முதன்மை செயலாட்சியர் ராஜகோபால் தலைமையில், பொதுமேலாளர் திருமலை, துணை பொது மேலாளர் ஜெயராஜ் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது.
அதில்,'நீலகிரி இன்கோ நிர்வாகம் தேயிலை வாரியத்தால் நிர்ணயிக்கப்படும் மாதாந்திர பசுந்தேயிலைக்கான விலையை மாற்றமின்றி வழங்க வேண்டும்; இன்கோ தொழிற்சாலையில் அக்., 2024ம் ஆண்டுக்கான விலை வித்தியாச நிலுவை தொகை ஒரு கோடி, 72 லட்சத்து, 32 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். எப்பநாடு இன்கோ தேயிலை தொழிற்சாலையில் உறுப்பினர்களுக்கு கடந்த, 7 ஆண்டுகளாக வழங்கவேண்டிய நிலுவை தொகையை தவணை முறையில் வழங்க வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகள், சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஆரிகவுடர் விவசாயிகள் சங்க தலைவர் மஞ்சை மோகன், துணை தலைவர் போஜன், துணை செயலாளர் வாசு உட்பட பலர் பங்கேற்றனர். உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

