/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நுாலக வார விழா போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
/
நுாலக வார விழா போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : நவ 12, 2025 08:58 PM
குன்னுார்: அருவங்காடு கிளை நுாலகத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் உள்ள கிளை நுாலகத்தில், 58வது தேசிய நுாலக வார விழா வரும், 14 முதல் 23ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதில், புத்தக கண்காட்சி மற்றும் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகளில் பங்கேற்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்படும், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டியில், வாசகங்களை, 21ம் தேதிக்குள் அருவங்காடு கிளை நுாலக நுாலகருக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுபவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

