/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் 23ல் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
/
ஊட்டியில் 23ல் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
ஊட்டியில் 23ல் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
ஊட்டியில் 23ல் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
ADDED : ஜன 03, 2026 06:02 AM
ஊட்டி: ஊட்டியில் வரும், 23ல் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஊட்டி பிங்கர் போஸ்ட் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், ஜன., 23ம் தேதி காலை, 11:00 மணிக்கு, விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் இருப்பின், அந்த கோரிக்கைகளை, வரும், 5ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்: 12, ஊட்டி - 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ, நேரடியாகவோ அல்லது jdhooty@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இந்த முகாமில், கலெக்டர் உட்பட, அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்வதால், விவசாயிகள் விவசாயம் சம்பந்தமான குறைகள் இருப்பின், கூட்டத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.