/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெள்ளை பூண்டு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
வெள்ளை பூண்டு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : மே 12, 2025 10:55 PM

கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், வெள்ளை பூண்டு சாகுபடி செய்வதில் விவசாயிகள், அதிக ஆர்வம் கட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இருப்பினும், நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில், மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு போகத்தில், வெள்ளைப் பூண்டு சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், நிலத்தில் ஈரத்தன்மை குறையாமல் இருந்து வருகிறது.
இதனால், கூடுமானவரை, நிலத்தை பண்படுத்தி வரும் விவசாயிகள், வெள்ளை பூண்டு விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, ஒரு கிலோ பூண்டு, 100 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. கடந்த ஆண்டை காட்டிலும் விலை குறைந்திருந்தாலும், இனிவரும் நாட்களில் பூண்டு விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.