ADDED : ஜூலை 04, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: நீலகிரியின் முக்கிய விவசாய பயிரான பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்காமல் விவசாயிகள், வருவாய் இன்றி, சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூடலுார் மண்வயல் பகுதி விவசாயிகள் தேயிலை செடிகளை அகற்றிவிட்டு, காபி, ஏலம் மற்றும் ஊடுபயிராக குறுமிளகு, பாக்கு பயிரிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'பசுந்தேயிலைக்கு, நிரந்தர விலை கிடைக்காததால், வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், தேயிலை செடிகள் அகற்றிவிட்டு காபி, ஏலக்காய் உள்ளிட்ட மாற்று பயிருக்கு மாறி வருகிறோம். புதிய அரசு பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்க நடவடிக்கை எடுத்தால், மட்டுமே தீர்வு கிடைக்கும்,' என்றனர்.
