/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரமான 'சாய்பந்த்' தேநீர் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
/
தரமான 'சாய்பந்த்' தேநீர் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
தரமான 'சாய்பந்த்' தேநீர் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
தரமான 'சாய்பந்த்' தேநீர் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : நவ 26, 2025 07:45 AM
கோத்தகிரி: கோத்தகிரி கடக்கோடு கிராமத்தில், விவசாயிகளுக்கு, வேளாண் வயல்வெளி பள்ளி சார்பில், தர மான தேநீர் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் கீர்த்திமான் டெகா பேசுகையில்,''எதிர்வரும் நாட்களில், விவசாயிகள் குழுவாக இணைந்து, பதிவு செய்த அமைப்பாக ஒன்றிணைந்தால் மட்டுமே, அரசின் திட்டங்கள் துரிதமாக கிடைக்கும். தேயிலை வாரியம், விவசாயிகளுக்கு வழங்கும் மானிய பதிவுகளை பெற்று விவசாயிகள் பயன்பெற வேண்டும். தரமான 'சாய்பந்த்' தேநீர் தயாரிப்பதற்கு தரமான தேயிலை அவசியம்,'' என்றார்.
இயற்கை விவசாயி ராம்தாஸ், ''விவசாயிகள் வேதி உரங்களை தவிர்த்து, இயற்கை முறையில், விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் மண்வளம் பாதுகாக்கப்படுவது டன் மகசூல் அதிகரித்து, விவ சாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்,'' என்றார்.