/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவனல்லாவில் புலியை தேடும் பணி தீவிரம்: வனத்துறை வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

ADDED : நவ 26, 2025 07:45 AM

கூடலுார்: முதுமலை, மசினகுடி மாவனல்லா அருகே, பெண்ணை தாக்கி கொன்ற புலியை 32 தானியங்கி கேமராக்கள் உதவியுடன் தேடும் பணியில், 35 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனல்ல பகுதியில், நேற்று முன்தினம் ஆடு மேய்த்து கொண்டிருந்த நாகியம்மாள், 60, என்பவரை புலி தாக்கி கொன்றது.
இதை தொடர்ந்து, டிரோன் கேமரா மற்றும் 16 இடங்களில் 32 தானியங்கி கேமராக்கள் பொருத்தி, புலியை தேடும் பணியில், 35 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரத்தில் புலியை பார்த்துள்ளனர்.
தொடர்ந்து, வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம், புலி நடமாட்டம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்ததுடன், ' அதிகாலை மற்றும் இருள் சூழ்ந்த நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும், புலி நடமாட்டம் இருப்பது தெரிந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர். மேலும், மாவனல்லா சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த, 17 மாணவர்களை வனத்துறையினர் நேற்று, தங்கள் வாகனங்களில் அரசு பள்ளிக்கு அழைத்து சென்று வந்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'புலியை தேடி அடையாளம் காணும் பணியில் வன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதல் கட்டமாக, 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
உரிய சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்ற பின், மேலும் 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும்,'என்றனர்.